21-10-2020 நேரம் காலை 11:00 மணி தற்சமயம் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்து வரக்கூடிய நாட்களில் வட-வடகிழக்கு திசையில் பயணித்து வங்கதேசம் அல்லது அதனை ஒட்டிய இந்திய வட கிழக்கு மாவட்டங்களை நோக்கி நகர உள்ளது.நிறைய நண்பர்கள் காற்றழுத்த தாழ்வு பகுதி விலகி செல்கிறதே இது நியாயமா? என என்னிடம் கேட்டு வருகிறீர்கள் இது வங்கதேசம் நோக்கி சென்றால் தான் கிழக்கு திசை காற்று தமிழகத்துக்கு விரைவாக வரும் அதன் பின்னரே வடகிழக்கு பருவமழை க்கான சூழல்கள் உருவாகும்.அது வங்கதேசம் செல்வதனை நான் வரவேற்கிறேன் அது ஓடிசாவிலோ அல்லது ஆந்திராவிலோ கரையை கடக்காமல் இருப்பது தான் மிகவும் நல்லது.அது வங்க தேசத்தில் கரையை கடந்ததும் ஒடிசா அருகே அழுத்தம் அத்திகரிக்கும் இது தமிழகத்துக்கு சாதகமானது.அது எவ்வளவு விரைவாக வங்கதேசத்தை கடந்து விலகி செல்கிறதோ அவ்வளவு விரைவாக நமக்கு கிழக்கு திசை காற்று தமிழக கடலோர மாவட்டங்களில் வீச தொடங்கிவிடும்.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் உள் மற்றும் தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை வழக்கம்போல பிற்பகலில் குரல் பதிவு செய்கிறேன்.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் வட தமிழகத்தில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை உண்டு.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
அரிமளம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 62 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 47 மி.மீ
வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) - 47 மி.மீ
மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம்) - 43 மி.மீ
தளி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 40 மி.மீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம (நாமக்கல் மாவட்டம்) - 39 மி.மீ
பள்ளிப்பட்டு (திருவள்ளுர் மாவட்டம்) - 37 மி.மீ
பெரம்பூர் (சென்னை மாநகர்) - 36 மி.மீ
திருமங்கலம் (மதுரை மாவட்டம்) - 35 மி.மீ
அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்) - 34 மி.மீ
திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம்) - 33 மி.மீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாநகர்) - 30 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 30 மி.மீ
கோதம்பத்தூர் தெற்கு (கோவை மாவட்டம்) - 29 மி.மீ
ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்) - 29 மி.மீ
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்) - 27 மி.மீ
பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) - 27 மி.மீ
செங்குன்றம் (திருவள்ளுர் மாவட்டம்) - 27 மி.மீ
மயிலாப்பூர் (சென்னை மாநகர்) - 26 மி.மீ
வாணியம்பாடி (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 26 மி.மீ
பெண்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 26 மி.மீ
மேலூர் ARG (மதுரை மாவட்டம்) - 25 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 25 மி.மீ
பொன்னேரி (திருவள்ளுர் மாவட்டம்) - 24 மி.மீ
திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்) - 24 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 23 மி.மீ
கோவிளங்குளம் (விருதுநகர் மாவட்டம்) - 22 மி.மீ
சோழவரம் (திருவள்ளுர் மாவட்டம்) - 22 மி.மீ
தண்டையார்பேட்டை (சென்னை மாநகர்) - 21 மி.மீ
எருமப்பட்டி (நாமக்கல் மாவட்டம்) - 20 மி.மீ
ஜெயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) - 20 மி.மீ
ஆம்பூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
அயனாவரம் (சென்னை மாநகர்) - 19 மி.மீ
தாமரைப்பாக்கம் (திருவள்ளுர் மாவட்டம்) - 19 மி.மீ
சூலகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 17 மி.மீ
திருபுவனம் (சிவகங்கை மாவட்டம்) - 17 மி.மீ
மேலலாத்தூர் (வேலூர் மாவட்டம்) - 17 மி.மீ
மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 16 மி.மீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளுர் மாவட்டம்) - 16 மி.மீ
காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 16 மி.மீ
பொண்ணை அணை (வேலூர் மாவட்டம்) - 16 மி.மீ
காரியப்பட்டி (விருதுநகர் மாவட்டம்) - 15 மி.மீ
பெருங்களூர் (புதுக்கோட்டை மாவட்டம்) - 15 மி.மீ
நெடுங்கல்(கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
வாட்ராப் (விருதுநகர் மாவட்டம்) - 14 மி.மீ
நாட்ராம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்) - 14 மி.மீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 14 மி.மீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 13 மி.மீ
பேராவூரணி (தஞ்சை மாவட்டம்) - 13 மி.மீ
மறந்தள்ளி (தர்மபுரி மாவட்டம்) - 13 மி.மீ
அதிராம்பட்டினம் (தஞ்சை மாவட்டம்) - 12 மி.மீ
காரம்பக்குடி (புதுக்கோட்டை மாவட்டம்) - 12 மி.மீ
அலக்கரை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) - 12 மி.மீ
மேலூர் (விருதுநகர் மாவட்டம்) - 11 மி.மீ
ஆர்.கே.பேட் (திருவள்ளுர் மாவட்டம்) - 11 மி.மீ
சோளிங்கர் (ராணிப்பேட்டை மாவட்டம்) - 11 மி.மீ
கீழாநிலை (புதுக்கோட்டை மாவட்டம்) - 10 மி.மீ
பர்லியார் ( நீலகிரி மாவட்டம்) - 10 மி.மீ
அம்பத்தூர் (சென்னை மாநகர்) - 10 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 10 மி.மீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிகவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.