இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 செப்டம்பர், 2020

23.09.2020 Southwest Monsoon Withdrawl process Going to start | Todays we athee forecast in tamil | Last 24 hours rainfall data of tamilnadu and Puducherry

0

23-09-2020 நேரம் காலை 10:20 மணி அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் குறிப்பாக மஹாராஷ்டிர மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை பதிவாகலாம்.

#குறைந்த _காற்றழுத்த_தாழ்வு நிலையின் தாக்கம் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்து இருப்பதால் பிற்பகளு
பிற்பகலுக்கு பிறகு கடல் காற்றின் வருகையை (#Sea_breeze) பொறுத்து கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று கூடும் இடங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.நான் ஏற்கனவே பதிவிட்டு இருந்தது போல 24-09-2020 ஆகிய நாளை முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை மேலும் அதிகரிக்க தொடங்கலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் சிறப்பான வெப்பசலன மழை உண்டு.அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகலில் பதிவிடுகிறேன்.

தென்மேற்கு பருவமழை விலகல் தொடங்குகிறது
====================
அடுத்து வரக்கூடிய சில நாட்களில் #Kutch மற்றும் #ராஜஸ்தான் மாநில வட மேற்கு பகுதிகளில் #தென்மேற்கு_பருவமழை முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமான அறிப்பிப்புகள் வெளியாகலாம். நான் பலமுறை இதற்கு முந்தைய காலங்களில் உங்களுக்கு குரல் பதிவுகளில் தெரிவித்து இருந்தது போல தென்மேற்கு பருவமழை 15°N வரையில் அதாவது ஆந்திரம் வரையில் விலகியாதாக அறிவிக்கப்படும் வரையில் #வடகிழக்கு_பருவமழை தொடர்பான அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகாது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=======================
சிவலோகம் (கன்னியாகுமரி மாவட்டம்) -  58 மி.மீ
சித்தாறு (கன்னியாகுமரி மாவட்டம்) -  40 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  31 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  30 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) -  30 மி.மீ
மேல் நிரார் (கோவை மாவட்டம்) - 22 மி.மீ
பெரியார் அணை (தேனி மாவட்டம்) -  22 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) -  22 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) -  21 மி.மீ
சின்கோனா (கோவை மாவட்டம்) -  19 மி.மீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) -  19 மி.மீ
வால்பாறை PTO (கோவை மாவட்டம்) -  18 மி.மீ
குளித்துறை (கன்னியாகுமரி மாவட்டம்) -  18 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 17 மி.மீ
சின்னகல்லாறு (கோவை மாவட்டம்) - 16 மி.மீ
கீழ் நிரார் (கோவை மாவட்டம்) -  16 மி.மீ
கண்ணிமார் (கன்னியாகுமரி மாவட்டம்) -  15 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) -  15 மி.மீ
குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  13 மி.மீ
தக்கலை (கன்னியாகுமரி மாவட்டம்) - 12 மி.மீ
செங்கோட்டை (தென்காசி மாவட்டம்) - 12 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) -  12 மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 11 மி.மீ
அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) - 11 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 11 மி.மீ
பாபநாசம் (நெல்லை மாவட்டம்) - 11 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 10 மி.மீ
மயிலடி (கன்னியாகுமரி மாவட்டம்) -  9 மி.மீ
பார்வுட் (நீலகிரி மாவட்டம்) -  9 மி.மீ
களியல் (கன்னியாகுமரி மாவட்டம்) - 8 மி.மீ
பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 7 மி.மீ
இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம்) -  7 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 7 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) -  7 மி.மீ
தேவாலா (நீலகிரி மாவட்டம்) - 6 மி.மீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி மாவட்டம்) -  6 மி.மீ
திருப்பதிசாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) - 5 மி.மீ

#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com


5 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக