இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 மே, 2020

2020 MAY 26 Today's Weather Report | www.tamilnaduweather.com

0

26-05-2020 நேரம் பிற்பகல் 1:10 மணி இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக தென் உள் , மேற்கு உள் ,மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்டங்களின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அங்கும் இங்குமாக இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம். மேலும் #விருதுநகர் , #மதுரை மாவட்ட மேற்கு பகுதிகளிலும் #தேனி மற்றும் #திண்டுக்கல் மாவட்ட மேற்கு பகுதிகளிலும் அங்கும் இங்குமாக ஒரு சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.அதேபோல் #கோவை , #திருப்பூர் , #ஈரோடு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம். தெற்கு கர்நாடக மாநில பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.#ராமநாதபுரம் , #புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதிகளை ஒட்டிய சில பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.

நான் முன்பே சில வாரங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்ததை போல 27-05-2020 ஆகிய நாளை முதல் தமிழக மேற்கு , மேற்கு உள் , தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பசலன மழை தீவிரமடைய தொடங்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
========================
கிளன்மோர்கன்(நீலகிரி மாவட்டம்) - 31 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் (கோவை மாவட்டம்) - 29 மி.மீ
சுரளக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்) - 25 மி.மீ
பெரியநாயக்கன்பாளையம் ARG (கோவை மாவட்டம்) - 25 மி.மீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 24 மி.மீ
புத்தன் அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 22 மி.மீ
வைகை அணை (தேனி மாவட்டம்) - 21 மி.மீ
குண்டடம் (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
மடத்துக்குளம் தாலுக்கா அலுவலகம் (திருப்பூர் மாவட்டம்) - 20 மி.மீ
சாத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 22 மி.மீ
ஆண்டிபட்டி (தேனி மாவட்டம்) - 19 மி.மீ
கமுதி (ராமநாதபுரம் மவட்டடம்) - 19 மி.மீ
கொடநாடு (நீலகிரி மாவட்டம்) - 18 மி.மீ
சிவலோகம்(கன்னியாகுமரி மாவட்டம்) - 18 மி.மீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 18 மி.மீ
பழனி (திண்டுக்கல் மாவட்டம்) - 16.5 மி.மீ
சித்தாறு(கன்னியாகுமரி மாவட்டம்) - 16 மி.மீ
பெரியகுளம் PTO (தேனி மாவட்டம்) - 15 மி.மீ
பரமக்குடி (ராமநாதபுரம் மாவட்டம்) - 15 மி.மீ
பண்டலூர் தாலுக்கா அலுவலகம்(நீலகிரி மாவட்டம்) - 14 மி.மீ
பல்லடம் (திருப்பூர் மாவட்டம்) - 14 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 13 மி.மீ
இளையாங்குடி (சிவகங்கை மாவட்டம்) - 12 மி.மீ
செட்டிகுளம் (பெரம்பலூர் மாவட்டம்) - 10 மி.மீ
பெரியகுளம் (தேனி மாவட்டம்) - 9 மி.மீ
தேவாலா(நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்) - 9 மி.மீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி மாவட்டம்) - 9 மி.மீ
கல்லட்டி (நீலகிரி மாவட்டம்) - 9 மி.மீ
வேப்பங்கோட்டை அணை (விருதுநகர் மாவட்டம்) - 9 மி.மீ
கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) - 8 மி.மீ
நடுவட்டம்(நீலகிரி மாவட்டம்) - 8 மி.மீ
அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) - 8 மி.மீ
எருமப்பட்டி(நாமக்கல் மாவட்டம்) - 8 மி.மீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்) - 8 மி.மீ
சங்கரன்கோவில் (தென்காசி மாவட்டம்) - 7 மி.மீ
அரவாக்குறிச்சி (கரூர் மாவட்டம்) - 7 மி.மீ
கொல்லிமலை ARG (நாமக்கல் மாவட்டம்) - 7 மி.மீ
பாலக்கோடு (தர்மபுரி மாவட்டம்) - 6 மி.மீ
ஆத்தூர் (சேலம் மாவட்டம்) - 5 மி.மீ
செருமுல்லி (நீலகிரி மாவட்டம்) - 5 மி.மீ
தாளாவாடி (ஈரோடு மாவட்டம்) - 5 மி.மீ
கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) - 5 மி.மீ
சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) - 4 மி.மீ
தொட்டபெட்டா ,உதகை (நீலகிரி மாவட்டம்) - 3 மி.மீ
கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்) - 3 மி.மீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி மாவட்டம்) - 3 மி.மீ
கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
கூடலூர் (தேனி மாவட்டம்) - 2 மி.மீ
மூலனூர் (திருப்பூர் மாவட்டம்) - 2 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
கடம்பூர் (தூத்துக்குடி மாவட்டம்) - 2 மி.மீ
வால்பாறை PAP (கோவை மாவட்டம்) - 2 மி.மீ
அப்பர் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல் மாவட்டம்) - 2 மி.மீ
மானாமதுரை (சிவகங்கை மாவட்டம்) - 2 மி.மீ
குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்) - 2 மி.மீ
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)  - 2  மி.மீ
தேக்கடி (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம்) - 1 மி.மீ
நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம்) - 1 மி.மீ
திருநெல்வேலி AWS (நெல்லை மாவட்டம்) - 1 மி.மீ
போடிநாயக்கனூர் ARG (தேனி மாவட்டம்) - 1 மி.மீ
வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோவை மாவட்டம்) - 1 மி.மீ
சிவகிரி (தென்காசி மாவட்டம்) - 1 மி.மீ

#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக