அதேசமயம் , நாளை #வேலூர் , #குடியாத்தம் , #பேர்ணாம்பட்டு , #ஆம்பூர் போன்ற பகுதிகளிலும் வெப்பநிலை வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும்...#கரூர் , #ஈரோடு , #பரமத்தி , #பவானி , #கொடுமுடி , #ராசிபுரம் , #திருத்தணி உட்பட பல இடங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து தான் இருக்கும்...
தென் மாவட்டங்களில் நாளை #எரிச்சநத்தம், #விருதுநகர் , #அழகாபுரி , #சாத்தூர் , #பந்தல்குடி , #ஆலங்குளம் , #கல்ஊத்து போன்ற இடங்களிலும் 100°F க்கும் அதிகமான அளவு பகல் நேர வெப்பநிலை பதிவாகக்கூடும்...அதே போல #திருநெல்வேலி - #நாங்குநேரி இடைப்பட்ட இடங்களும் கவனிக்கப்பட வேண்டியவை....
பின் பணி கால அதிகாலை நேர வெப்பநிலை தொய்வு
==================
கடலோரத்திற்கு நெருக்கத்தில் வெப்பநிலை தொய்வு அதாவது அதிகாலை நேர பனிப்பொழிவு எந்த பகுதிகளில் நாளை இருக்கும் என்று கேட்பீர்களே யானால் #புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய #கடலூர் மற்றும் #விழுப்புரம் மாவட்ட பகுதிகளின் சில இடங்கள் நெல்லிக்குப்பம் , பண்ருட்டி , வானூர் , விழுப்புரம் , அரசூர் போன்ற பகுதிகளையும் #பாகூர் , #வில்லியனூர் போன்ற பகுதிகளுக்கு நெருக்கத்தில் உள்ள இடங்களையும் நம்மால் குறிப்பிட்டு சொல்ல முடியும்.....
மேலும் பல தகவல்களை உங்களுடன் குரல் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்..
தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் உங்களுடன் உங்கள் #இம்மானுவேல் 🙏
