5.11.21 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு உள் , மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.13 ஆண்டுகளுக்கு பிறகு #திருப்பூர் மாவட்டம் #அவிநாசி க்கு வடக்கே இருக்கும் #குளம் நிரம்பியதாக ஒரு தோழர் தெரியப்படுத்தி இருந்தார்.அந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை வழங்கியது இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #திருப்பூர் மாவட்ட வடக்கு பகுதிகளில் மழை வாய்ப்புகள் உண்டு.
👉அரபிக்கடல் சுழற்சியின் காரணமாக ஈரப்பதம் மிக்க மேற்கு காற்று கர்நாடக மாநில தெற்கு கடலோங்களில் ஊடுருவி வருவதால் .அடுத்த 24 மணி நேரத்தில் #கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தரமான மழை உண்டு.மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வரக்கூடிய காலங்களில் அதிகரிக்கலாம்.
👉புலிகேட் அதாவது #பழவேற்காடு எரியை ஒட்டிய சில இடங்களில் மழைக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு அதிலும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை வாய்ப்புகள் உண்டு.
👉சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை வாய்ப்புகள் உண்டு இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு கிழக்கே நிலைகொண்டு இருக்கும் அந்த சுழற்சியின் நகர்வுகளை அடிப்படையாக கொண்டது.சுழற்சி சற்று தெற்கு அல்லது தென் கிழக்கு திசையில் நகர முற்பட்டால் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் சில இடங்களில் மழை கிடைக்கலாம்.இல்லையேல் அவ்வப்போது திடீரென வானம் மேகமூட்டதுடன் காணப்படும்.
👉#நீலகிரி , ஈரோடு மாவட்ட வடக்கு பகுதிகள் , #சேலம் , #திருப்பூர் , #கோவை , #தர்மபுரி , #கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகள் #டெல்டா மாவட்ட உட் பகுதிகளின் சில இடங்கள் என அடுத்த 24 மணி நேரத்திலும் அரபிக்கடல் சுழற்சியின் நகர்வுகளுக்கு ஏற்ப சில இடங்களில் தரமான மழை உண்டு.
👉வங்கக்கடல் சுழற்சியின் நகர்வுகளுக்கு ஏற்ப #புதுச்சேரி - #சென்னை இடைப்பட்ட பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.
👉நவம்பர் 10 ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையலாம்.இது தொடர்பாக நாம் அடுத்தடுத்த நாட்களில் விவாதிக்கலாம்.
விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
தமிழகத்தில் கடந்த (05\11/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 110மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 102மிமீ
நம்பியூர் (ஈரோடு), இராசிபுரம் (நாமக்கல்) 84மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 81.6மிமீ
நல்லாறு (கோயம்புத்தூர்) 78மிமீ
பேரையூர் (மதுரை) 73.4மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 66.4மிமீ
சிவகாசி (விருதுநகர்), சேலம் (சேலம்) 66மிமீ
பொழந்துறை (கடலூர்) 64.6மிமீ
ஆத்தூர் (சேலம்) 63.4மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 62மிமீ
விருத்தாசலம் ARG (கடலூர்) 60.5மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி), மஞ்சளாறு அணை (தேனி) 60மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 59.2மிமீ
கயத்தாறு (தூத்துக்குடி) 59மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) 58மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 57.3மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி) 57மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 56மிமீ
ஓசூர் AWS (கிருஷ்ணகிரி) 49மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 47.4மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 46.4மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 45மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 43.4மிமீ
மணியாச்சி (தூத்துக்குடி), துறையூர் (திருச்சி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 43மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 42.2மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு), அப்பர் நிரார் (கோயம்புத்தூர்) 42மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 41.8மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு), நவமலை (கோயம்புத்தூர்) 41மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 40.9மிமீ
மேமாத்தூர் (கடலூர்), ஓசூர் (கிருஷ்ணகிரி) 40மிமீ
வைகை அணை (தேனி) 38.8மிமீ
வத்ராப் (விருதுநகர்) 38.6மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி),அவலாஞ்சி (நீலகிரி) 38மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 37.5மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்) 36மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு) 35மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 32.2மிமீ
பவானி (ஈரோடு), புதுச்சத்திரம் (நாமக்கல்), கயத்தாறு ARG (தூத்துக்குடி) 32மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 31மிமீ
புலிவலம் (திருச்சி), பெரியகுளம் (தேனி) 30மிமீ
செந்துறை (அரியலூர்) 29.4மிமீ
ஆண்டிமடம் (அரியலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 29மிமீ
சூலூர் (கோயம்புத்தூர்) 28.5மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 28.4மிமீ
PWD IB ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) 28மிமீ
விளாத்திகுளம் (தூத்துக்குடி),சின்கோனா (கோயம்புத்தூர்) 27மிமீ
காங்கேயம் (திருப்பூர்) 26.8மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 26மிமீ
தளி (கிருஷ்ணகிரி) 25மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 24.4மிமீ
TNAU CRIஏதாபூர்(சேலம்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 24மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 23.4மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 23.2மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), அப்பர் பவானி (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி),கிண்ணகோரை (நீலகிரி) 23மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 22.8மிமீ
தேவாலா (நீலகிரி) 22மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 21மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 20.4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) 20மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்),எருமைபட்டி (நாமக்கல்) 19மிமீ
எடப்பாடி (சேலம்) 18.4மிமீ
அவிநாசி (திருப்பூர்) 18மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி), பொன்னேரி (திருவள்ளூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 17மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 16.2மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) 16மிமீ
சமயபுரம் (திருச்சி) 15.4மிமீ
பெருந்துறை (ஈரோடு), தர்மபுரி (தர்மபுரி), சோத்துப்பாறை அணை (தேனி) 15மிமீ
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 14.3மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), அரண்மனைபுதூர் (தேனி) 14.2மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),ஜீ பஜார் (நீலகிரி) 14மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 13.2மிமீ
கடல்குடி (தூத்துக்குடி),விரகனூர் (சேலம்),கிடேய் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்) 13மிமீ
வாழிநோக்கம் (இராமநாதபுரம்), குன்னூர் PTO (நீலகிரி) 12.8மிமீ
உத்தமபாளையம் (தேனி) 12.7மிமீ
சிவகிரி (தென்காசி) 12.4மிமீ
ஒட்டபிடாரம் (தூத்துக்குடி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்),தாளவாடி (ஈரோடு),சாத்தையாறு அணை (மதுரை),கொப்பம்பட்டி (திருச்சி), காரைக்கால் (புதுச்சேரி), செங்குன்றம் (திருவள்ளூர்),ஏறையூர் (பெரம்பலூர்), எம்ரேல்டு (நீலகிரி) 12மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 11.4மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்),காரியாக்கோவில் அணை (சேலம்) 11மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 10.8மிமீ
அரியலூர் (அரியலூர்), பாலக்கோடு(தர்மபுரி) 10.4மிமீ
தம்மம்பட்டி (சேலம்), தட்டயங்பேட்டை (திருச்சி), ஏற்காடு (சேலம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 10மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 9.8மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்), பார்வுட் (நீலகிரி) 9மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 8.6மிமீ
மைலாடி (கன்னியாகுமரி), செங்கம் (திருவண்ணாமலை) 8.2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 8.1மிமீ
தனிஷ்பேட் (சேலம்),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), அகரம் சிகூர் (பெரம்பலூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), கொடநாடு (நீலகிரி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 8மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 7.8மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 7.6மிமீ
தென்காசி (தென்காசி) 7.4மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்),விரபாண்டி (தேனி), தண்டையார்பேட்டை (சென்னை) 7.2மிமீ
மூலனூர் (திருப்பூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), சிவலோகம் (கன்னியாகுமரி) 7மிமீ
இரணியல் (கன்னியாகுமரி), மயிலாப்பூர் (சென்னை) 6.4மிமீ
விருதுநகர் (விருதுநகர்), திருப்பூர் வடக்கு (திருப்பூர்), கழுகுமலை (தூத்துக்குடி),கிள்செருவை (கடலூர்),களியல் (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்), மடத்துக்குளம் (திருப்பூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 6மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 5.6மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்) 5.4மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 5.2மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்),கீழ்ரசடி (தூத்துக்குடி),தென்பறநாடு (திருச்சி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), எண்ணூர் AWS (சென்னை), செங்கோட்டை (தென்காசி),வேடநத்தம் (தூத்துக்குடி),துவாக்குடி (திருச்சி), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), ஓமலூர் (சேலம்), வைப்பார் (தூத்துக்குடி) 5மிமீ
உத்தமபாளையம் (தேனி) 4.3மிமீ
கடலாடி (இராமநாதபுரம்), பெரியார் (தேனி),திருபூண்டி (நாகப்பட்டினம்), சோழிங்கநல்லூர் (சென்னை) 4.2மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி),தனியாமங்கலம் (மதுரை), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),சிறுக்குடி (திருச்சி), தக்கலை (கன்னியாகுமரி), திருமங்கலம் (மதுரை), தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 4மிமீ
மேட்டூர் அணை (சேலம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 3.8மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 3.6மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 3.2மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),கட்டுமயிலூர் (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), வாடிப்பட்டி (மதுரை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை), வேப்பூர் (கடலூர்), தேக்கடி (தேனி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 3மிமீ
தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 2.6மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), இளையான்குடி (சிவகங்கை) 2.4மிமீ
தேவகோட்டை (சிவகங்கை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.2மிமீ
சென்னிமலை (ஈரோடு), திருச்சுழி (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை) 2மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 1.6மிமீ
முசிறி (திருச்சி),திருச்செந்தூர் (தூத்துக்குடி),வி.களத்தூர் (பெரம்பலூர்), மன்னார்குடி (திருவாரூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பண்ருட்டி (கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com