05.12.2020 நேரம் காலை 10:00 மணி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதிகளில் தொடர்கிறது இதன் காரணமாக நாம் எதிர்பார்த்து இருந்தது போல இன்றும் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை மேகங்கள் குவிந்து வருகின்றன அடுத்த சில மணி நேரங்களுக்கும் வட மற்றும் டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளில் மழை தொடரும்.அந்த சுழற்சி வலுக்குறைந்து மன்னார் வளைகுடா பகுதிகளில் இருந்து உள்ளே நுழைய தொடங்கிய பின்னர் உள் மாவட்ட பகுதிகளில் மழை அதிகரிக்கும்.நிகழ்நேர தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
#புதுச்சேரி மற்றும் #காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடரும்.
அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் பதிவிடப்படும்.
#புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் #காரைக்கால் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 156 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி பகுதியில் 31 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=================
கொத்தவாச்சேரி - 185 மி.மீ
நாகப்பட்டினம் - 158 மி.மீ
குடவாசல் - 155 மி.மீ
புவனகிரி - 154 மி.மீ
சேத்தியாதோப்பு - 140 மி.மீ
தரங்கம்பாடி - 128 மி.மீ
சீர்காழி - 124 மி.மீ
மயிலாப்பூர் , DGP அலுவலகம் , சென்னை - 120 மி.மீ
வேம்பாக்கம் - 118 மி.மீ
ராமேஸ்வரம் - 111 மி.மீ
அண்ணா பல்கலைக்கழகம் , சைதாப்பேட்டை , சென்னை - 110 மி.மீ
திருப்பூண்டி - 110 மி.மீ
காயல்பட்டினம் - 108 மி.மீ
ஸ்ரீபெரம்பத்தூர் - 99 மி.மீ
கொள்ளிடம் - 99 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் - 99 மி.மீ
எம்.ஜீ.ஆர் நகர் - 98 மி.மீ
ஊத்துக்கோட்டை - 95 மி.மீ
தூத்துக்குடி - 89 மி.மீ
தலைஞாயிறு - 88 மி.மீ
சிதம்பரம் - 85 மி.மீ
வடக்குத்து - 84 மி.மீ
வானமாதேவி - 82 மி.மீ
மயிலாடுதுறை - 82 மி.மீ
குடிதாங்கி - 82 மி.மீ
கும்மிடிப்பூண்டி - 81 மி.மீ
லப்பைகுடிக்காடு - 80 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
80 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.அடுத்த சில மணி நேரங்களில் பிற்பகல் வாக்கில் முழுமையான மழை அளவுகள் பட்டியல் நமது www.tamilnaduweather.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.