04.12.2020 நேரம் காலை 9:00 மணி நான் நேற்றைய நள்ளிரவை ஒட்டிய குரல் பதிவில் உங்களிடம் குறிப்பிட்டு கூறியிருந்ததை போலவே - https://youtu.be/35dvq9q5lu8 #சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதிகளில் மிக கனமழை பதிவாகியுள்ளது இப்பொழுது மீண்டும் #காரைக்கால் , #நாகப்பட்டினம் சுற்றுவட்டப் பகுதிகளில் காற்று மிக சிறப்பாக குவிய தொடங்கியுள்ளது.#சிதம்பரம் - #சீர்காழி இடையே #கொள்ளிடம் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 361 மி.மீ அளவு மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
மேலும் வானிலை மாதிரிகளின் மாறுபட்ட கணிப்புகளுக்கு இடையிலும் நான் உங்களிடம் குறிப்பிட்டு கூறியிருந்ததை போலவே #மன்னார்_வளைகுடா பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்கிறது.அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களிலும் அது மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடையும்.இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக டெல்டா , வட கடலோர மாவட்டங்களில் கனமழை உண்டு இன்று நான் கூறியிருந்ததை போல உட் பகுதிகளிலும் மழையின் அளவு தீவிரமடையும்.இது தொடர்பான விரிவான அறிக்கை நமது Youtube பக்கத்தில் அடுத்த சில மணி நேரங்களில் பதிவிடப்படும்.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரையில் #புதுச்சேரி பகுதியில் 138 மி.மீ அளவு மழையும் #காரைக்கால் பகுதியில் 73 மி.மீ அளவு மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=========================
கொள்ளிடம் - 361 மி.மீ
சிதம்பரம் - 340 மி.மீ
கொத்தவாச்சேரி - 335 மி.மீ
அண்ணாமலை நகர் , சிதம்பரம் - 329 மி.மீ
லால்பேட்டை - 296 மி.மீ
பரங்கிப்பேட்டை - 264 மி.மீ
மணல்மேடு - 255 மி.மீ
காட்டுமன்னார்கோயில் - 253 மி.மீ
திருத்துறைப்பூண்டி - 220 மி.மீ
குடவாசல் - 210 மி.மீ
சீர்காழி - 210 மி.மீ
சேத்தியாதோப்பு - 206 மி.மீ
ராமேஸ்வரம் - 204 மி.மீ
ஈச்சன்விடுதி - 202 மி.மீ
அணைக்கரை - 198 மி.மீ
பேராவூரணி - 195 மி.மீ
மஞ்சளாறு , தஞ்சை மாவட்டம் - 192 மி.மீ
புவனகிரி - 189 மி.மீ
மயிலாடுதுறை - 188 மி.மீ
மலையூர் , புதுக்கோட்டை மாவட்டம் - 175 மி.மீ
கரம்பக்குடி , புதுக்கோட்டை மாவட்டம் - 175 மி.மீ
பட்டுக்கோட்டை - 168 மி.மீ
வடக்குத்து - 167 மி.மீ
மேமாத்தூர் - 166 மி.மீ
மதுக்கூர் ,தஞ்சை மாவட்டம் - 162 மி.மீ
குப்பநத்தம் - 159 மி.மீ
திருக்கழுக்குன்றம்- 156 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் - 152 மி.மீ
விருத்தாசலம்- 151 மி.மீ
பாபநாசம் , தஞ்சை மாவட்டம் - 138 மி.மீ
கடலூர் IMD - 136 மி.மீ
வானமாதேவி - 136 மி.மீ
திருவிடைமருதூர் - 136 மி.மீ
கும்பகோணம் - 134 மி.மீ
அய்யம்பேட்டை , தஞ்சை மாவட்டம் - 134 மி.மீ
பண்ருட்டி - 132 மி.மீ
வலங்கைமான் - 132 மி.மீ
நன்னிலம் - 139 மி.மீ
உளுந்தூர்பேட்டை - 125 மி.மீ
நந்தியார் தலைப்பு , திருச்சி மாவட்டம் - 121 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilnaduweather.com
120 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கும் சில பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.அனைத்து பகுதிகளின் நிலவரம் அடங்கிய முழுமையான மழை அளவுகள் பட்டியல் நமது இணையதளமான www.tamilnaduweather.com இல் இன்னும் சற்று நேரத்தில் பதிவிடப்படும்.